Also Watch
Read this
By: Web Team

அரக்கோணம் அரசு மருத்துவமனையில், சக்கர நாற்காலி இல்லாத காரணத்தினால், தனது வயதான தாயை சுமந்து செல்லும் மகனின் வீடியோ வைரல் ஆகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அரக்கோணம் நகரத்தில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையின் சேவை குறித்து, சமூக வலைதளங்களில் பொது மக்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒருவர் தனது தாயை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், கழிவறைக்கு தனது தாயை கொண்டு செல்ல போதிய சக்கர நாற்காலி இல்லாத காரணத்தினால், தனது தாயை சுமந்து கொண்டு தள்ளாடியபடி கழிவறைக்கு கொண்டு செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.
இதற்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.