Also Watch
Read this
By: Web Team

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படலாம் என, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து. மேட்டூர் அணையில் இருந்து 45 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீர் திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காவிரி ஆற்றில் மக்கள் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என கரையோர மக்களுக்கு ஒலிப்பெருக்கியின் மூலமாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.