Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்க, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பதை இபிஎஸ் தரப்பு விரும்பாது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், டிசம்பர் மாதத்திற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது, அவரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரிய போதும் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.