Also Watch
Read this
By: Manigandan Raja

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் கிள்ளுக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழத் தெருவில் சுமார் 170 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றர். கடந்த 15 ஆண்டுகளாக சரிவர குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
குறிப்பாக கோடைக்காலம் துவங்கிய காலத்தில் இருந்து இப்பகுதியினர் குடிக்க குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த ஒரு மாத காலமாக கூட்டுக் குடிநீர் ஒரு சொட்டு கூட வரவில்லை என வேதனை தெரிவித்த மக்கள் குளத்து உப்பு தண்ணீரை காய்ச்சு குடிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என
கூறப்படுகிறது.
இந்த நிலையில் கீழத்தெருவுக்கு வழங்கப்பட்ட குடிநீரை நிறுத்திவிட்டு வேற தெருவுக்கு மாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கச்சனம்-கீழ்வேளூர் சாலையில் கிள்ளுக்குடி கடைத்தெரு பகுதியில் சாலையில் முள்களை வெட்டி போட்டு கயிறு கட்டி மறைத்தும் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் பலர் மோட்டாரை வைத்து தேவைக்கு
அதிகமாக தண்ணீரை எடுத்து விடுவதால் தங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில்லை எனவும் புகார் தெரிவித்து பேச்சுவார்த்தை செய்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்
ஈடுப்பட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு உடனியாக வராததால் சுமார் 3 மணி நேரமாக நடைப்பெற்ற போராட்டத்தால் கச்சனம் , கீழ்வேளூர் சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக் கூடிய மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லக்கூடிய பொது மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா,
பேச்சுவார்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved