news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீரமாகாளியம்மன் ஆலயத்தில் திருத்தேரோட்டம்
tv

Also Watch

வீரமாகாளியம்மன் ஆலயத்தில் திருத்தேரோட்டம்

அறந்தாங்கி, புதுக்கோட்டை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வீரமாகாளியம்மன்

அறந்தாங்கியில் அமைந்து அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் அம்மனின் ஆலயம் அறந்தாங்கி நகரில் அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாத பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் முழுவதும் நடைபெறுகின்ற திருவிழாவில் கடந்த 21ம் தேதி செவ்வாய்கிழமை காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.

விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் அந்தந்த  மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ வீரமாகாளியம்மனை எழுந்தருள செய்தனர். தேர் சக்கரத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தேரை வடம் தொட்டு இழுத்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் பொதுமக்கள் திரண்டிருந்து சாமி தரிசனம்
செய்தனர்.அறந்தாங்கி காவல்த்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Link
18ம் படி கருப்பண்ணசாமி கோவில் நடை திறப்பு

18ம் படி கருப்பண்ணசாமி கோவில் நடை திறப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்ரீதேவி கொல்லாபுரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved