news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள்
tv

Also Watch

tv

Read this

வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள்

பாதுகாப்பின்றி பயணம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காட்டு யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடுவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வரும் நிலையில் தற்போது தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகனங்களை குறி வைத்து காத்திருக்கின்றன.

இந்நிலையில் இன்று காலை தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வந்த வாகனத்தை பண்ணாரி சோதனை சாவடி அருகே வழிமறைத்த காட்டு யானை ஒன்று அந்த வாகனத்தில் உள்ள கரும்பை சுவைக்க துவங்கியது.

இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டி மெல்ல மெல்ல வாகனத்தை நகர்த்தி யானையிடம் இருந்து தப்பிச் சென்றார். தொடர்ந்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளால் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதையில் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பின்றி பயணம் செய்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வன விலங்குகள் சாலையில் நடமாடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும்
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
நடிகர் சூரியின் சொந்த ஊரில் கோயில் திருவிழா

நடிகர் சூரியின் சொந்த ஊரில் கோயில் திருவிழா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள்

0
45 mins agoshare
காட்டு யானைகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau