Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் தரேஷ் அகமது ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மருத்துவமனையின் ஒவ்வொரு அறையாக சென்று வசதிகளை பார்வையிட்டதோடு, அங்கு கழிவறைகள் பூட்டி கிடந்ததை பார்த்து அதிகாரிகளிடம் ஏன் பூட்டி கிடக்கிறது? இதற்குரிய அதிகாரிகள் எங்கே? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதனை அடுத்து கீழ்த்தளத்திற்கு வந்தபோது அங்கு புற நோயாளிகள் சிகிச்சைக்கு வந்திருந்த வயதான பெண்மணி ஒருவர் தனக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுக்கிறார்கள் என புகார் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு இருந்த மருத்துவர்களை அழைத்து விசாரித்தார் அமைச்சர் அருண்ராஜ். அப்போது மருத்துவர்கள், "இங்கு உள்நோயாளிகளாக தங்கி இருப்பவர்களுக்கு மட்டுமே இன்சுலின் வழங்கப்படுவதாகவும், புற நோயாளிகளுக்கு இன்சுலின் வழங்கப்படுவதில்லை", எனவும் தெரிவித்தனர்.இதனையடுத்து புகார் தெரிவித்த பெண்மணியிடம், புறநோயாளிகளுக்கும் இன்சுலின் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக நம்பிக்கை அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved