news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கு மருத்துவருக்கு ஜாமீன், மற்றொருவருக்கு முன் ஜாமீன்
tv

Also Watch

குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கு மருத்துவருக்கு ஜாமீன், மற்றொருவருக்கு முன் ஜாமீன்

முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
High court

தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஜாமின் ஒருவருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் சிலர் பேசியதாககிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறை இதுவரை 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.


இந்த வழக்கில் கடந்த 14 தேதி கைது செய்யப்பட்ட திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த டாக்டர் ராஜசேகர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அதே போல கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்

இந்த வழக்குகள் நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக் வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. ஜாமின் மற்றும் முன் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் விதிக்கின்றன நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவிக்கபட்டது.


அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் நிபந்தனை ஜாமின் மற்றும் முன் ஜாமின் வழங்குவதாகவும் மறு உத்தரவு வரும் வரை காலை 10.30 மணி, மாலை 5.30 மணி இரு வேலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது. விசாரணை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Link
ஆயுதப் பற்றாக்குறையால் போரை நிறுத்தியதா அமெரிக்கா?

ஆயுதப் பற்றாக்குறையால் போரை நிறுத்தியதா அமெரிக்கா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved