Also Watch
Read this
By: Manigandan Raja

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர் கூட்டம் தொடங்கியவுடன் மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் அனுமதியை பெற தேவை இல்லை என கூறிய மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரை கண்டித்தும்.
மேகதாட்டில் அணை கட்டினால் டெல்டா மாவட்ட விவசாயிகள் முற்றிலுமாக பாதிக்கப்படுவார்கள் எனவே மத்திய மாநில அரசுகள் மேகதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது.

மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது ஆகவே திருவாரூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து குறுவையை
இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் முன்பு திருவாரூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர் அதனை தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடத்தப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved