news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி

திருச்சி

23

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில், நடைபெற்ற என்டிஎ பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

திருச்சியில் பிரதமர் மோடி
கேரள மாநிலத்தில் இன்று மார்ச்11ஆம் தேதி பிற்பகல், பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்துள்ளார்.
விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் பஞ்சப்பூருக்கு இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரில் பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.

பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல்
முதலில், பிரதமர் மோடி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே துறைகளின் சாா்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, சுமாா் ரூ.5,650 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை, அடிக்கல் நாட்டியும், கொடியசைத்தும் தொடங்கி வைத்தார்.

* நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ரூ. 3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல்

* சென்னை மணலியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.1,490 கோடி முதலீட்டிலான மசகு எண்ணெய் உற்பத்தி ஆலை நாட்டுக்கு அா்ப்பணிப்பு

* பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகள் திறப்ப

* தேசிய நெடுஞ்சாலை 81ல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல்

* 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவை

என்டிஏ பொதுக்கூட்டம்
இதனை தொடர்ந்து, அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக டி.டி.டி.தினகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

Related Link
“மத்திய கிழக்கில் இந்தியர்களை தவிக்க விடமாட்டோம்”

“மத்திய கிழக்கில் இந்தியர்களை தவிக்க விடமாட்டோம்”


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 16 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved