Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பார் உரிமம் பெற்று தருவதாக 1கோடியே 60லட்சம் ரூபாய் மோசடி செய்த வணிகத்துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர். வத்தலக்குண்டு பகுதியில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான தங்கும் விடுதியில், தேனியை சேர்ந்த வணிகவரித்துறை அலுவலர் முத்துப்பாண்டி வழக்கமாக தங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பார் தொடங்கினால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி, பார் உரிமம் பெற்றுத் தருவதாக சுந்தரமூர்த்தி மற்றும் குருபாலன் ஆகிய இருவரை சந்திரனிடம் அறிமுகம் செய்து வைத்து பணம் பறித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.