Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 113 லிட்டர் சாராயம் மற்றும் 3 ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் நடத்திய சோதனையில், சாராய ஊறல் போட்டிருந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ராஜசேகரை போலீஸார் கைது செய்தனர்.