news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அதிமுகவிற்கு உண்மையான தீபாவளி, பொங்கல்
tv

Also Watch

tv

Read this

அதிமுகவிற்கு உண்மையான தீபாவளி, பொங்கல்

சனி, துரோகி, ஆமை, பச்சோந்தி

32

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அதிமுகவிற்கு பிடித்த சனி ஒழிந்துவிட்டது எனவும் உண்மையிலேயே இன்றுதான் அதிமுகவிற்கு தீபாவளி மற்றும் பொங்கல் எனவும் எம்.பி. சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.

அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியைவிட மோசமானவர் தான் ஓபிஎஸ் என காட்டமாக பேசி உள்ள சி.வி.சண்முகம் அருகிலேயே இருந்து துரோகம் செய்த ஓபிஎஸ் ஆயிரம் எதிரிகளுக்கு சமம் எனவும் கோபத்தை கொட்டி உள்ளார்.

மிகவும் நியாயமானவர் போல் பேசினார்
இதுகுறித்து சி.வி.சண்முகம் கூறியதாவது;
எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதற்கு காலம் தாழ்த்தினார், முடக்கினார், அதிமுக வேகமாக செயல்படாமல் பார்த்துக் கொண்டார். இதையெல்லாம் திமுக செய்ய வேண்டியது. ஆனால், அதிமுகவில் இருந்து கொண்டே ஓபிஎஸ் செய்தார். நகர்மன்றத் தலைவர், எம்எல்ஏ, அமைச்சர், முதலமைச்சர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை ஓபிஎஸ்-க்கு எந்த இயக்கம் தந்ததோ, அந்த இயக்கத்தின் தலைமைக் கழகத்தின் கதவுகளை எட்டி உதைத்த பாவத்தால் கட்சியில் இருந்து பொதுக் குழுவினரால் நீக்கப்பட்டார்.

இதற்கு மேல் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் நீடிக்கவிட்டால், கட்சியை அழித்துவிடுவார் என பொதுக் குழு உறுப்பினர்களே முடிவெடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட துரோகிகளை கட்சியிலிருந்து நீக்கினர். கட்சியில் இருந்து வெளியேற்றிய பிறகும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினார். மிகவும் நியாயமானவர் போல் பேசினார். தனக்கு எந்த பதவியும் வேண்டாம், தன்னை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

திமுகவின் பி டீம்
ஆனால், இவர் ஆமை, இவரை வீட்டிற்குள் விட்டால் வீடு விளங்காது, நாசமாகத்தான் போகும். அதிமுகவை ஒருங்கிணைக்க போகிறேன் என சொன்னாரே இதுவரை அதற்கான முயற்சிகளை எடுத்தாரா? சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையாவது சந்தித்து ஏதாவது பேசியிருக்கிறாரா? அவர், திமுகவின் பி டீம் என அன்று நாங்கள் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. அதிமுகவை பிளவுபடுத்தி, இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க திமுக உத்தரவிட்டதன் பேரில் ஓபிஎஸ் வழக்கு மேல் வழக்கு போட்டார். ஓபிஎஸ்ஸின் பின்னால் திமுக இருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்த துரோகம் தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. துரோகம் என்றைக்கும் ஜெயிச்சதாக சரித்திரம் இல்லை.

இன்று தான் பொங்கல், தீபாவளி
அதிமுகவில் உள்ள எல்லாருக்கும் இன்று தான் பொங்கல், தீபாவளி. ஏனென்றால் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். எங்களை கொஞ்சம் நஞ்சம் பிடித்திருந்த சனி விட்டது. இனி எங்கள் கட்சிக்கு திருஷ்டி சுத்தி போட வேண்டியதுதான் பாக்கி.
இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.

Related Link
திமுகவில் OPS ஐக்கியம், அம்மா TO தளபதி

திமுகவில் OPS ஐக்கியம், அம்மா TO தளபதி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 57 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved