news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்கும் திட்டம் தொடங்கி வைப்பு
tv

Also Watch

tv

Read this

பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்கும் திட்டம் தொடங்கி வைப்பு

விலையில்லா வேட்டி, சேலையும் விநியோகம்

40

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cm

சென்னை, ஆலந்தூரில் உள்ள நியாய விலைக் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது.

இதையும் பாருங்கள் - மலர்ந்த முகத்துடன் பொங்கல் பரிசு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

4
1 min agoshare
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau