Also Watch
Read this
By: Web Team

துவரங்குறிச்சி பூத நாயகி அம்மன் கோயில் பூச் சொரிதல் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் அமைந்துள்ள பூதநாயகி அம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கியது. கோயில் முன்பு அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு அபிஷேக ஆராதனை முடிந்து அங்கிருந்து பூத்தட்டுகளை, பக்தர்கள் சுமந்து சென்றனர்.

சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள், வரிசையாக நின்று அம்மனுக்கு பூக்களை செலுத்தி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் திருவுருவ சிலையை வைத்து, ஆடல், பாடல், கொண்டாட்டம் மற்றும் வாண வேடிக்கையுடன் ஊர்வலம் சென்றனர்.

பூத்தட்டுக்களை கையில் ஏந்தியும், முளைப்பாரியை தலையில் சுமந்தும் பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து பூக்களை சாற்றி அம்மனை வழிபட்டனர்.