news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நூற்றாண்டு கண்ட அரசு தொடக்கப்பள்ளிக்கு சீர்வரிசை
tv

Also Watch

tv

Read this

நூற்றாண்டு கண்ட அரசு தொடக்கப்பள்ளிக்கு சீர்வரிசை

கன்னியாகுமரி, செம்பொன்விளை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கன்னியாகுமாரி பழைய மாணவர்கள்

அரசு தொடக்கப்பள்ளிக்கு சீர்வரிசை  : 

கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியிவ் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் படித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர், என பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று வரை தொடர்ந்து தொடக்க கல்வி பயின்று வரும் நிலையில் தற்போது 100 ஆண்டுகளை எட்டி நூற்றாண்டை கொண்டாடுகிறது

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த பள்ளியில் 60 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான பெஞ்ச், டெஸ்க், பீரோ, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர் வரிசையாக இரண்டு டெம்போ வேனில் ஏற்றி தனது குடும்பத்தினருடன்.

ஜோதி ஏந்தி செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து கொடுத்ததோடு அந்த பள்ளியில் பணியாற்றி தங்களுக்கு கல்வி கற்று தந்து ஓய்வு பெற்ற 90 வயதான மூத்த ஆசிரியர் காலில் விழுந்து
ஆசீர்வாதம் பெற்று கொண்டனர்.

தொடர்ந்து அந்த பள்ளியில் 70 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்களையும் வரவழைத்து தங்களது ஆசிரியர் மற்றும் எம்.பி விஜய்வசந்த் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி கவுரவித்ததோடு தங்களுடன் படித்த நண்பர்களுடன் தங்கள் குடும்பத்தோடு உரையாடி மகிழ்ந்ததோடு தங்கள் பேரக்குழந்தைகளை வைத்தே விழிப்புணர்வு நாடகங்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்ததோடு.

தங்கள் பள்ளி பருவ நண்பர்கள் அவரது பிள்ளைகள் பேரக்குழந்தைகளை நலம் விசாரித்து நெகிழ்ச்சியடைந்தனர் அரசு தொடக்கப்பள்ளியில் 60.ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள்
ஒன்றிணைந்து தங்கள் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முப்பெருவிழாவாக நடத்தியதால் பள்ளி வளாகமே திருவிழா கோலம் பூண்டது.

தொடர்ந்து பேசிய முன்னாள் மாணவரான அரசு பள்ளி ஆசிரியை மேரி ஸ்டெல்லா மற்றும் அறுவை சிகிட்சை நிபுணரான ரோட்ரிக்ஸ் தாயின் கருவறைக்கு அடுத்து வகுப்பறை தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய இடம் எனவும் நான் இந்த பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டேன் என சொல்வதை விட வளர்க்கப்பட்டேன் என்று பேசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Link
மரத்தின் மீது மோதியதால் பள்ளத்தில் கவிழாமல் தப்பிய கார்

மரத்தின் மீது மோதியதால் பள்ளத்தில் கவிழாமல் தப்பிய கார்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதைவட மின்சார பெட்டி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

3
1 hr 7 mins agoshare
நாமக்கல் நெருப்பு பிரச்சனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved