Also Watch
Read this
By: Fyrose Banu

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் மைதானத்தில ஊரை வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் பணியிடங்கள் மற்றும் மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள ஈர்ப்பு ஓட்டுநர் பதிவுகளை எழுத்தர் அலுவலக உதவியாளர் இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும், ஏழு ஆண்டுகள் பணி முடிந்துள்ள பணி மேற்பார்வலர்கள் அனைவரையும் இளநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர வேண்டும், பணி மேற்பார்வையாளர் நிலையிலிருந்து உதவி பொறியாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானார் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.