news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகர பகுதிக்குள் உலா வரும் கரடி, சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

நகர பகுதிக்குள் உலா வரும் கரடி, சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி

தென்காசி

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
bear

செங்கோட்டை நகரப் பகுதிகளுக்குள், இரவு நேரங்களில் உலா வரும் கரடியின், சிசிடிவி காட்சிகளை கண்டு, பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில், சமீபகாலமாக, வனவிலங்குகளின் தொல்லை என்பது, அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பழைய குற்றாலம் செல்லும் சாலையில் கரடி ஒன்று உலா வந்தது.
புளியங்குடி பகுதியில், வேலைக்கு சென்ற 3 பெண்களை கரடி தாக்கிய நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், செங்கோட்டை நகரப் பகுதிக்குள் கரடி ஒன்று இரவு நேரங்களில் உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் வசித்து வரும் நகரப்பகுதிக்குள் எப்படி கரடி வந்தது? என்பது தொடர்பாக, வனத்துறையினர் அதன் காலடித்தடங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் சுற்றி தெரியும் கரடியை பிடிக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

0
20 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau