Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே மலைப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் ஊரணியை, தனி நபருக்கு பட்டாவாக வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முடுக்கலான் குளம் கிராம் அருகே மலைப்பகுதியில் தமிழக அரசால், சுமார் 6 ஏக்கரில் ஊரணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரணியில் மான்கள், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நீர் குடிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவில்பட்டியை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு வருவாய் துறையினர் இந்த இடத்திற்கு பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தனிநபர், ஊரணியை ஆக்கிரமித்து உள்ளதால் கால்நடைகள் நீர் குடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கள் மலைப்பகுதியில் உள்ள ஊரணியை மீட்டு மீண்டும் கால்நடை பராமரிப்புக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.