news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெக சேலம் மீட்டிங், திடலுக்குள் Checking தீவிரம்
tv

Also Watch

தவெக சேலம் மீட்டிங், திடலுக்குள் Checking தீவிரம்

வெடிகுண்டு சோதனை

68

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இன்று விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் சேலம் புறப்பட்டார்.

தவெக நிர்வாகிகள் கூட்டம்

சேலத்தில் இன்று விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

தவெக திடல் தயார்

சேலம் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் திடலுக்குள் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்; மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது. தவெக நிர்வாகிகள், ஒவ்வொருவராக திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு சோதனை
விஜய் பேச உள்ள இடம் அருகே போலீசார் மோப்ப நாய்களை வைத்து தீவிரமாக வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. 5000 பேருக்கு பாதுகாப்பு பணிக்காக 1000 போலீசார் நியமனம்; 20 பேர் கொண்ட தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தீ தடுப்பு கருவிகள், கயிறு, ஸ்ட்ரச்சர் உள்ளிட்டவற்றுடன் 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில், செட்டில்மெண்ட் மன்னன் கணேசன்

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved