Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை, கை, கால்களை கட்டி போட்டு விட்டு தாலியை பறித்துச் சென்றவனை போலீசார் கைது செய்தனர்.
மேல தாளியாம்பட்டியை சேர்ந்த 60 வயதான லட்சுமி, சீகம்பட்டி சாலையோரம் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
முகமூடி அணிந்து வந்த மர்மநபர் அவரை தாக்கி, வாயைத் துணியால் பொத்தி கை, கால்களை கட்டி போட்டுவிட்டு தாலியை பறித்துச் சென்றான்.
மாலையில் அவ்வழியாக சென்ற வடிவேல் என்பவர் மூதாட்டியை மீட்டு அவரது மகளிடம் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவன் நகை பறித்தது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved