Also Watch
Read this
By: Manigandan Raja
மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக ஒதுக்கிய மாநிலங்களவை சீட்டுக்கு போட்டியிடும், பாமக தலைவர் அன்புமணி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் இருந்து...
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மார்ச்-5ஆம் தேதி உடன் நிறைவடைகிறது.

திமுக கூட்டணிக்கு 4, அதிமுக கூட்டணிக்கு 2
தமிழகத்தில் காலியாக உள்ள இந்த ஆறு இடங்களில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும். அதிமுக சார்பில் தம்பிதுரையும், பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில் அன்புமணியும் போட்டியிடுகின்றனர்.

தம்பிதுரை, அன்புமணி வேட்பு மனு தாக்கல்
அதிமுக சார்பில் தம்பிதுரை, சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனுவை வழங்கினார். தம்பிதுரை 6ஆவது முறையாக நாடாளுமன்றம் செல்கிறார். அவரைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில், அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved