Also Watch
Read this
By: Web Team

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நீர்நிலையில் வீடுகட்டி வசித்து வந்த செல்வி என்பவர் அங்கிருந்து காலி செய்ய வேண்டும் என மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை ரத்து செய்யக்கோரி, செல்வி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பதை அங்கீகரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.