Also Watch
Read this
By: Web Team

குணா குகை பகுதியில், தொடரும் குரங்குகளின் அட்டூழியத்தால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து கொடைக்கானலுக்கு, குடும்பத்துடன் சுற்றுலா வந்த ஆதிலட்சுமி என்பவர், குணா குகை பகுதிக்கு சென்றுள்ளார்..
அப்போது, அங்கிருந்த குரங்கு ஒன்று, ஆதிலட்மியின் கைப் பையை தூக்கி சென்று, மர உச்சி பகுதிக்கு சென்றது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சுற்றுலா பயணி கூச்சலிட்டார். மேலும் கைப்பையில் 2 கைபேசியும், பணம் ஐடி கார்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குணா குகை பகுதியில் சுற்றுலா பயணிகள் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் குரங்கு தூக்கி சென்ற கைப்பையை மரத்தில் இருந்து கிழித்து எடுத்து, அதில் இருந்து ஒவ்வொரு பொருளாக கீழே விழுந்த நிலையில், இறுதியாக பையையும் அந்த குரங்கு கீழே போட்டது.

இதுபோல் சுற்றுலாப் பயணிகளின் பொருட்களை குரங்குகள் எடுத்துச் செல்லும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.