Also Watch
Read this
Posted on: Feb 14, 2026 11:35 AM
By: Manigandan Raja

நிவாரணத் தொகை அறிவித்த முதலமைச்சர் :
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் வீடு இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்புக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவி.
வந்தவாசி அருகே இளங்காடு கிராமத்தில் வீடு புணரமைக்கும் போது இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் அவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரண உதவியை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இதை அடுத்து பள்ளி மாணவர்கள் தனது தாத்தா வீடு உள்ள இளங்காடு கிராமத்திற்கு சென்ற நேரத்தில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்ததால் தங்களின் சொந்த கிராமமான வழூர் கிராமத்திற்கு பிரேத பரிசோதனை முடிந்து உடல் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
வழூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன் என்பவரின் 2 மகன்கள் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம்வகுப்பு படிக்கும் அபினேஷ், 10ம் வகுப்பு படிக்கும் முகேஷ், ஆகியோர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் காசோலைகளை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் மற்றும் செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் வந்தவாசி வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved