news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கரண்ட் அடுப்பு காலி ஆகிடுச்சு..!!!
tv

Also Watch

கரண்ட் அடுப்பு காலி ஆகிடுச்சு..!!!

சென்னை

107

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvt 4

மத்திய கிழக்கு போர் சூழல் காரணமாக கேஸ் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கேஸ் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமல்லாது, வீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனை அடுத்து அரசு சார்பில் மாற்று வழியை கண்டுபிடிப்பதற்கு முன்னர் இல்லத்தரசிகள் மாற்று வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். அதாவது சமீப காலமாக பெரும் விற்பனையை சந்திக்காத மின்சார அடுப்புகளை நாடி உள்ளனர் இல்லதரசிகள்

ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட மின் அடுப்புகள் விற்பனை
இது தொடர்பாக வட சென்னை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வீட்டு உபயோக கடை உரிமையாளர் கூறும் பொழுது, பொதுவாக மாதத்திற்கு 20 மின் அடுப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மின் அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும், காலை முதல் பொதுமக்கள் மின் அடுப்புகளை வாங்க ஆர்வமாக வந்து நிலையில் தங்களிடம் போதுமான கையிருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் கூறினார்.

விற்று தீர்ந்த மின்சார அடுப்புகள்
மின் அடுப்புகளை வாங்க வரும் பொதுமக்கள் விலையைப் பற்றி கவலைப்படாமல் இந்த மின்சார அடுப்புக்கென பிரத்தியேகமாக பயன்படுத்தும் பாத்திரங்களையும் அதிக அளவில் வாங்கி செல்வதாகவும், இதனால் மின் அடுப்பு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தற்போது தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Link
ஓட்டுநர் பயிற்சியின் போது நிகழ்ந்த துயரம்

ஓட்டுநர் பயிற்சியின் போது நிகழ்ந்த துயரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய தலைமைச் செயலகம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved