Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ராதாகிருஷ்ணன் யானைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். ஓவேலி பகுதியில் சுற்றித் திரிந்த யானை தாக்கியதில் இதுவரை 12 பேர் உயிரிழந்த நிலையில், அதனை பிடிக்க 4 கும்கி யானைகள் உதவியுடன் கடந்த 7 நாட்களாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வனக் கால்நடை மருத்துவர்கள் ராஜேஷ், கலைவாணன் ஆகியோர் அதிகாலை 7 மணி முதல் பரண் மேல் அமர்ந்து காத்திருந்து, பகல் பனிரெண்டரை மணிக்கு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தியுள்ளனர். ராதாகிருஷ்ணன் யானையை முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல க்ரால் லாரியும், 2 ஜேசிபிகளும் தயார் நிலையில் உள்ளன.
இதையும் படியுங்கள் : இளைஞரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநரின் வீடியோ நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் தகராறு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved