Also Watch
Read this
By: Web Team

மதுரையில் வேறொரு இளைஞரிடம் பேசிய காதலியை கல்லால் அடித்துக் கொலை செய்த காதலன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். மதுரை சின்ன மாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா, நர்சிங் படித்து வந்த மாமன் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
வேலைக்கு ஏதும் செல்லாத ஜெயசூர்யாவுடன் பேசுவதை நிறுத்திய மாணவி, வேறொருவருடன் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச மாணவியை ராஜாக்கூர் கண்மாய் கரைக்கு அழைத்து சென்ற ஜெயசூர்யா அவரை கல்லால் தாக்கி கொலை செய்தார்.