Also Watch
Read this
By: Web Team

திருச்சி, அரியமங்கலத்தில் நவராத்திரியின் 9ம்நாளை முன்னிட்டு, அகோரிகள் மகா யாகம் நடத்தினர்.
அரியமங்கலத்தில் உள்ள ஜெய் அகோர காளி கோயிலில், அகோரி குருவான மணிகண்டன், பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது முதல் தினசரி ஜெய் அகோரகாளி கோயிலில் பூஜை நடந்து வந்தது. நவராத்திரி விழாவின் 9ஆம் நாளை முன்னிட்டு நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல் முழுவதும் திருநீறு, சாம்பலை பூசிக்கொண்டு அக்னி குண்டம் முன்பு அமர்ந்து சிறப்பு யாக பூஜை நடத்தினர்.

யாகத்தின் போது அகோரி தலைகீழாக நின்று தியானம் செய்ததுடன், அகோரி குருவான மணிகண்டன், ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்து,
நவ தானியங்கள், பழ வகைகள் மற்றும் ஆடு, கோழிகளின் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு மகா யாக பூஜை செய்தார்.
ஜெய் அகோர காளி, ஜெய் அஷ்ட கால பைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இதில் அகோரிகள், பெண் அகோரிகள், தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved