Also Watch
Read this
By: Web Team

மனைவி குடும்பம் நடத்த வராததால், மனைவியின் தோழியை சரமாரியாக வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் எஸ்.எஸ்.வி. கோவில் தெருவைச் சேர்ந்த 18 வயதான ரம்யா, தனது தோழி அமலாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். திருமணமான அமலா கருத்து வேறுபாடு காரணமாக தது கணவர் மணிகண்டனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 9 மாதங்களாக தனித்து வசித்து வந்த அமலா, தன் தோழி ரம்யாவுடன் சேர்ந்து அவரது வீட்டில் இருந்துள்ளார். இதை அறிந்த மணிகண்டன், மனைவியை அழைக்க சென்றுள்ளார்.
ரம்யாவின் வீட்டில் இருந்த அமலாவை மீண்டும் தன்னுடன் வந்து வாழும்படி மணிகண்டன் கேட்டுள்ளார். ஆனால், அமலோவோ, முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டு இருக்கு. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன்ம், அமலா, தன்னிடம் இருந்த கத்தியால் அமலாவின் தோழி ரம்யாவை சரமாரியாக வெட்டியு ள்ளார். இதில் தலையில் பலத்த காயமடை ந்த ரம்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார், திருவேற்காட் டைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற வினோத், அவரது நண்பரான அமைந்தகரையைச் சேர்ந்த மோகன் ஆகியோரை கைது நேற்று செய்தனர். போலீசார் விசாரணையில், "எங்கள் பிரிவுக்கு ரம்யாதான் காரணம் என்று நினைத்து அவரை வெட்டினேன்" என மணிகண்டன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.