Also Watch
Read this
கடந்த கால நிர்வாகக் குளறுபடிகள், வேண்டுமென்றே சிலர் செய்யும் செயல்களால் மின்வெட்டு ஏற்படுவதாக முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்தார்.
முதல்வர் விஜய் உரை
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலுரையில் பேசியதாவது;
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலத் தவறால் விளைந்தவை
கடந்த ஆட்சி காலங்களில் கண்டுகொள்ளாமல் விட்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் கலாச்சாரம் எல்லாம் வளர்ந்து நிற்பதாக முதலமைச்சர் குற்றம் சாட்டினார். டிஜிபி-யையே நியமிக்காமல் ஆட்சி செய்தவர்கள் தற்போது, அக்கறையாக சொல்வது போல் அவதூறாக பேசி வருவதாகவும் விமர்சித்தார்.
கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை
PARTY FUND என்ற பெயரில் டாஸ்மாக்கில் இருந்து அடித்த கொள்ளைப் பணத்தை எல்லாம் கஜானாவுக்கு சேர்த்து வருவதாக முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டினார். ஊழல் தான் நிர்வாகத்திறன் என்றால் அந்தத் திறன் தங்களுக்கு இல்லை என்றும், ஊழல் பணத்தை தொடவும் மாட்டோம், தொட்டால் விடவும் மாட்டோம் என்றும் அதிரடியாக பேசினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து...
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படத்திறப்பின் போது தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளி தேசிய கீதம் தான் முதலில் பாடப்பட்டதாக முதலமைச்சர் விஜய் சாடினார். கேட்டால் அது குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பார்கள் எனவும் திமுக மீது விமர்சனத்தை முன் வைத்தார்.
திமுகவை சாடிய முதலமைச்சர் விஜய்
தவெக கூட்டணி ஆட்சி தங்களின் தயவோடுதான் நடப்பதாக திமுக சொல்லிக்கொண்டே இருப்பதாக கூறிய முதலமைச்சர் விஜய், தோழமை கட்சிகளை நாங்கள் தான் அனுப்பினோம், நாங்கள் தான் அனுப்பினோம் என்று ஏன் கதறுகின்றனர்? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஈவில்ஸ் என டெவில்ஸ் கூறலாமா? - விஜய்
தவெக ஆட்சியை EVILS, EVILS என DEVILS கூறக்கூடாது என திமுகவை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் விஜய், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஒன்றும் மே 10ஆம் தேதி அன்று வந்துவிடவில்லை, பல வருஷமா இருக்குற பிரச்சனை தான், பல வருஷமா கண்டுகொள்ளாமல் விட்ட பிரச்சனை தான் என்றும் கூறினார். இன்று எதிர்க்கட்சிக்காரர்கள் அதை பற்றி கேட்கும் போது, எனக்கு அது அக்கறையாக தெரியவில்லை. அவதூறு அரசியலாக தான் தெரியுது; பழிபோடும் அரசியலாக தான் தெரியுது என்றும் விஜய் சாடினார்.
அன்று MGR இன்று விஜய்
"ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்" என்று எம்.ஜி.ஆர் அன்று பாடினார். அதை இன்று விஜய் செயலில் காட்டுகிறார் என்று ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியது. அரசியலுக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் உங்களுக்கு என்ன தெரியும் என்று கேள்வியெழுப்பியவருக்கு இந்த தலையங்கமே பதில் போதும்.
இவ்வாறு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உரை நிகழ்த்தினார்.