Also Watch
Read this
பேரறிஞர் அண்ணா தலைமையில் சாமானியர் ஆட்சியும், எம்ஜிஆர் தலைமையில் மிக சாமானியர் ஆட்சியும், தனது தலைமையில் மிக மிக சாமானியர் ஆட்சியும் அமைந்திருப்பதாக முதலமைச்சர் விஜய் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில்...
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது;
ஒரு குடும்பம் மட்டும் ஆள்வது ஆட்சியல்ல, ஒவ்வொரு குடும்பத்துக்குமான ஆட்சியை செய்வதுதான் நல்லாட்சி.
திமுக, அதிமுகவை மறைமுகமாக சாடிய விஜய்
நமக்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்து, நமது ஆட்சிக்கே நாள் குறித்ததாக திமுக, அதிமுகவை மறைமுகமாக முதலமைச்சர் விஜய் சாடினார். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், புண்ணியவான்களின் ஆட்சியில் போட்ட ஓட்டைகளை எல்லாம் சரி செய்ய வேண்டி இருப்பதாகவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
எங்களுக்கு பணத்தை சுருட்டத் தெரியாது
மக்கள் பணி செய்யத் தெரிந்த அளவுக்கு, தங்களுக்கு மக்கள் பணத்தை சுருட்டத் தெரியாதுதான் என்றும் முதலமைச்சர் விஜய் பேசினார். பதவி உயர்வு, பணியிட மாற்றம், புதிய பணிகளை உருவாக்கத் தெரியுமே தவிர, அதை பணத்துக்கு விற்க தெரியாது என்றும் விமர்சித்தார்.
மு.க.ஸ்டாலினின் சைகையை செய்த விஜய்
தனது உரையில் முடிவில், சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சைகையை செய்து காட்டி சட்டப்பேரவை பதிலுரையை முதல்வர் விஜய் நிறைவு செய்தார்.
