news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news Evils vs Devils - சட்டமன்றத்தை அலறவிட்ட விஜய்
tv

Also Watch

tv

Read this

Evils vs Devils - சட்டமன்றத்தை அலறவிட்ட விஜய்

ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடி கொடுத்த விஜய்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PRABHA YT SPL

CM Vijay : தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்கு அனல் பறக்க முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசியுள்ளார். 

சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், மக்கள் பணத்தை கொள்ளையடித்தது யாராக இருந்தாலும் விடமாட்டோம். ஒவ்வொரு ஊழலாக வெளியே வரும் போலயே. இது அவர்களின் ஆதரவால் ஆட்சி நடப்பதாக சொல்றாங்க. ஆனால், மக்கள் தயவால்தான் இங்கு ஆட்சி நடைபெறுகிறது.

சமூகநீதி அரசுன்னு சொல்றவர்களை பார்த்து கேட்கிறேன். பட்டியலின சகோதரர்களுக்கு எத்தனை அமைச்சர் பதவிகளை கொடுத்தீர்கள்? ஆனால், இந்த ஆட்சியில் 8 பட்டியலின சகோதரர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்துள்ளோம். எங்கள் ஆட்சியில் 4 சகோதரிகளுக்கு அமைச்சர் பதவியை கொடுத்திருக்கிறோம்.

ஊழல் இல்லாத கட்சிதான் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கூட்டணி ஆட்சி அமைக்க வரும். ஊழலில் திளைத்தவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்க வரமாட்டார்கள். மக்கள் நமக்கு வாக்களித்தது தப்பு என பேச்சுகள்தான் இருக்கிறது. என்று எங்களை அன்று எம்ஜிஆரை என இதே குற்றச்சாட்டுதான் வைக்கிறார்கள்.


நக்கல், நயாண்டி பேசிவிட்டு முதல்வர் பதிலளிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் சொல்ல சொல்லுங்கள், அது மக்களுக்கு நல்லதாக இருந்தால் நாங்கள் கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்வோம்.

விஜயையும், சாமானிய மக்களையும் அவமானப்படுத்துவதே அவர்களின் நோக்கமாக உள்ளது. தமிழ், மொழி, கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லி கொண்டு இரட்டை வேஷம் போடமாட்டோம். அரசியல் வேறு, ஒன்றிய அரசுக்கு இடையே இருக்கும் நிர்வாக அணுகுமுறை என்பது வேறு” என அனல் பறக்க பேசினார்.

முன்னதாக தனது ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாறியதையும், அதன் மூலம் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களையும், சமூகத்துக்காக பங்கேற்ற போராட்டங்களையும் பட்டியலிட்டு பேசினார். விஜய் பேசி கொண்டிருக்கும்போதே, எதிர்கட்சி உறுப்பினர்கள் பாதியிலேயே அவையில் இருந்து எழுந்து சென்று வெளிநடப்பு செய்தனர். 


Related Link
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"தியேட்டராக மாறிய சட்டமன்றம்..ஆக்‌ஷன் காட்டும் CM"

2
8 mins agoshare
230626-LIVE-PTI-3-11AM








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau