news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "தியேட்டராக மாறிய சட்டமன்றம்..ஆக்‌ஷன் காட்டும் CM"
tv

Also Watch

tv

Read this

"தியேட்டராக மாறிய சட்டமன்றம்..ஆக்‌ஷன் காட்டும் CM"

எங்களுக்கு கோபம் வராதா?

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
230626-LIVE-PTI-3-11AM

சட்டமன்றத்தை தியேட்டராக மாற்றிவிட்டதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசி கொண்டிருக்கும்போதே உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “ சினிமா ஷூட்டிங்கில் பேசுவது போல் டயலாகை மனப்பாடம் செய்துவந்து முதலமைச்சர் விஜய் பேசி சென்றுள்ளார். சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் போல் மாற்றிவிட்டனர். சட்டமன்றத்தில் விசில் அடிக்கின்றனர். இதையெல்லாம் சபையே பார்க்காதது. இன்னும் கொஞ்சம் நாள் போனால், சட்டமன்றத்தில் டான்ஸ் கூட ஆடுவார்கள். சோஷியல் மீதியாவில் ரீல்ஸ் போடும் அளவுக்கு, டிரெண்டாகும் என நினைத்து எல்லாத்தையும் செய்கின்றனர்.

முதலமைச்சர் விஜய் நடிக்க ஆரம்பித்து விட்டார். சட்டமன்றத்தில் சபாநாயகரின் அனுமதி பெற்று ஆக்‌ஷன் எல்லாத்தையும் காட்டுகிறார். சட்டமன்றம் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறி வருகிறது. திமுக மீது ஊழல் சொல்வதற்கு ஆதாரம் வேண்டும், ஆதாரம் இருந்தால் தர சொல்லுங்க. நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறோம்.

அவர்கள் இஷ்ட்டத்து பேசுவதை கேட்டு கொண்டு அங்கேயே உட்கார முடியாது. எங்களுக்கு கோபம் வராதா? அவை நேரம் முடிந்தபோதும் அமைச்சர் பேசி கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தை காமெடி சபையாக மாற்றியுள்ளனர். மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் முதல்வர் சொல்லவில்லை. வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டர் போன்ற தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை.

தற்போதுள்ள அரசின் மூலம் திமுக ஆட்சியின் திட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பெண் திட்டத்தில் உள்ளவர்களும் முதல்வர் போல் ஷூட்டிங் செய்து ரீல்ஸ் போட தொடங்கி விட்டனர்” என கூறியுள்ளார். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குடும்பம் நடத்த மனைவி வராததல தோழியை வெட்டிய கணவர்

2
11 mins agoshare
crime








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau