Also Watch
Read this
முதல்வர் விஜய், குட்டிக்கதை சொல்கிறேன் என்ற உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடி உள்ளார்.

பதிலுரை என்ற பெயரில்...
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் திரைக்கதையாக எழுதப்பட்ட அவதூறுகளை அள்ளிவீசி நடிப்புத்திறனை முதல்வர் காட்டி உள்ளார். பேரவையின் லைவ் கேமராவை, சினிமா கேமரா என்று நினைத்துக் கொண்டு முதல்வர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி சிங்கில் டேக்கில், ஷூட் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
முதலமைச்சரின் பதிலுரையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, மோசமாகி இருக்கும் சட்டம், ஒழுங்கு மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.

கண்டிக்கத்தக்கது...
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில், விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை முதல்வர் கொச்சை செய்தது கண்டிக்கத்தக்கது. குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல், அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில், கணவரை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாடு முதல்வராக, நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு உதயநிதி பதிவிட்டு உள்ளார்.