news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காதலனுடன் சேர்ந்து அம்மா, அப்பா, தங்கையை போட்டுத்தள்ளிய மகள்
tv

Also Watch

tv

Read this

காதலனுடன் சேர்ந்து அம்மா, அப்பா, தங்கையை போட்டுத்தள்ளிய மகள்

வீட்டில் பயங்கரம்

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
crime


பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான முறையில் ஆயுதத்தல தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

பெங்களூருவின் கே.ஆர்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாய் கிரீன் அபார்ட்மென்ட்டில் 3 பேர் அதிர்ச்சிகரமான முறையில் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பார்த்ததில் இறவர்கள், சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் அவர்களது இளைய மகள் சுப்ரியா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேவீட்டில் வசித்து வந்த சோமசுந்தரின் மூத்த மகளான ஸ்வேதாவும், அவரது காதலன் கென்னத்தும் காணாததால் அவர்கள் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகித்தனர். முதற்கட்ட விசாரணைபடி, ஸ்வேதாவின் பெற்றோர், கென்னத்துடனான உறவை எதிர்த்துள்ளனர். ஸ்வேதாவும், கெத்தனத்தும் சேர்ந்து 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளனர். இதை தெரிந்த சோமசுந்தரமும், அவரது மனைவியும் எதிர்த்துள்ளனர்.

இந்த நிலையில், ஸ்வேதாவின் தாய் முத்துலட்சுமி மட்டுமே இருந்தபோது, ​​ஸ்வேதாவும் கென்னத்தும் குடும்ப வீட்டிற்குச் சென்றதாகவும், தந்தை சோமசுந்தரும், தங்கை சுப்ரியாவும் வெளியே சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ஸ்வேதா, கென்னத் மற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக காவல்துறை சந்தேகிக்கிறது. அந்த மோதலின் போது, ​​முத்துலட்சுமி அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொலைக்குப் பிறகு, சோமசுந்தரும் சுப்ரியாவும் வீடு திரும்புவதற்கு முன்பு, ஸ்வேதாவும், கென்னத்தும் குளியலறையில் இரத்தக் கறைகளைக் கழுவியதாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, சுப்ரியா வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​ஸ்வேதா அவரைக் கட்டுப்படுத்தியதாகவும், கென்னத் ஆயுதத்தால் தாக்கி அவரைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் சோமசுந்தரமும் அதே ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சோமசுந்தரம் வீட்டிலிருந்து வெளியே ஓடிச் சென்று உதவி கேட்டபடி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் ஸ்வேதா மற்றும் கென்னத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Link
கணவரை தேடும் மனைவி என உதயநிதி விமர்சனம்

கணவரை தேடும் மனைவி என உதயநிதி விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆட்டம் காட்டப்போகும் மழை!

2
5 mins agoshare
rain








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau