Also Watch
Read this
கத்தார் நாட்டில், தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவியை முதல்வர் விஜய் அறிவித்தார். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த...
கத்தார் நாட்டின் தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், வேலைக்காக சென்ற, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த துயர செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்த தமிழக முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.

ரூ.10 லட்சம் நிவாரண நிதி
பாதிக்கப்பட்ட மூன்று பேரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் உடனடி நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

வெளிநாட்டில் உயிரிழந்த இந்த தமிழர்களின் உடல்களை தாயகத்திற்கு தாமதமின்றி கொண்டு வருவதற்கான அனைத்து தூதரகப் பணிகளையும், மீட்பு நடவடிக்கைகளையும் அயலகத் தமிழர் நலன் துறை மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

அரசே ஏற்கும்
உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வரை தேவையான அனைத்து சட்டப்பூர்வ உதவிகளையும் தமிழக அரசே முழுமையாக ஏற்கும் என்றும் முதலமைச்சர் விஜய் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டு உள்ளது.