திருவாரூர் மாவட்டம் ஜாம்புவானோடையில் அமைந்துள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்காவில், கந்தூரி விழாவை முன்னிட்டு கொடிமரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. சேக்தாவூது ஆண்டவர் தர்காவில் 724-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா வரும் 23ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு 95 அடி உயரமுள்ள கொடி மரம் நிறுத்தப்பட்டது.