news-tamil-logo

3/19/2026, 1:24:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.
tv

Also Watch

tv

Read this

கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

சென்னை

Posted on: Feb 18, 2026 07:09 AM

8

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
theft 3(1)

சென்னை தி.நகரை தலைமை அலுவலகமாக கொண்டுள்ள அட்டிகா கோல்டு நிறுவனம் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தங்க நகைகள் அடமானம், விற்கும் நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்த்த போது 10 சவரன் தங்க நகைகள் குறைவாக இருந்தது தெரியவந்தது.

3 ஆண்டுகளாக சிறுக, சிறுக நகைகளை திருடிய ஊழியர்கள்

நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது கிளை மேலாளர் பிரவீன் குமார், பணபரிவர்த்தனை அலுவலர் யுவராஜ், பொறுப்பாளர் செல்வ திருமேனி கண்ணன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து 3 ஆண்டுகளாக சிறுக, சிறுக நகைகளை திருடியது தெரியவந்தது. மொத்தமாக ரூ.10.58 லட்சம், 80 கிராம் தங்கம் திருடப்பட்டு இருந்தது. இதனை அறிந்து கிளை மேலாளர் கார்த்திக் ஸ்ரீ ராமச்சந்திரன் திருடிய நகைகளை திருப்பி தரும்படி கேட்டதாகவும்ம் ஆனால் திருடிய நகைகளை திருப்பித்தரமுடியாது என்றும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கிளை ளேலாளர் கார்த்திக் ஸ்ரீ ராமச்சந்திரன் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தலைமறைவாக உள்ள செல்வ திருமேனி கண்ணன் கைது

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கிளை மேலாளர் பிரவீன் குமார், பணபரிவர்த்தனை அலுவலர் யுவராஜ் ஆகிய இருவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தங்க நகை, பணம் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வ திருமேனி கண்ணனை தேடி வந்த நிலையில் தூத்துக்குடியில் செல்வ திருமேனி கண்ணன் பதுங்கி இருப்பதாக தெரிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று கைது செய்தனர்.

கைதான 3 பேரிடமும் இருந்து ரூ. 10.30 லட்சம், 82 கிராம் தங்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வ திருமேனி கண்ணனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து வருகிற மார்ச் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Related Link
3ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை

3ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை

                       
                   


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 37 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved