Also Watch
Read this
By: Web Team

கடந்த 2 நாட்களாக, விலை குறைந்த ஆபரணத் தங்கம், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
கடந்த 10 மாதங்களில் தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு, ஒரு சவரனுக்கு ரூ.21 ஆயிரம் வரை உயர்ந்தது. தொடர்ந்து ஏற்றமாகவே இருந்த தங்கத்தின் விலை, கடந்த 2 நாட்களாக இறக்கம் கண்டது.
நேற்று முன் தினம், தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாயும், சவரனுக்கு 320 ரூபாயும் குறைந்து ரூ.84,800க்கு விற்பனையானது. தொடர்ந்து, நேற்று சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.84,080க்கு விற்பனையானது.
கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.10,550க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.84,400க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில், தங்கத்துக்கு நிகராக, வெள்ளியின் விலையும் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் விலை உயர்ந்து சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.153க்கும் கிலோவுக்கு ரூ.3000 உயர்ந்து ரூ.1,53,000க்கும் விற்பனையாகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved