Also Watch
Read this
By: Web Team

கரூர் அரசுக்கல்லூரியில் பின்னல் போடாமல் வந்த மாணவியை பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக திட்டியதாக கூறி மாணவ, மாணவிகள் கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தான்தோன்றிமலையில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி பேராசிரியரான ஜாஹிர் ஹுசைன் மீது போலீசில் மாணவி புகாரளித்ததாக தெரிகிறது. மாணவிக்கு ஆதரவாக காவல்நிலையம் சென்றவர்கள் டிசி கொடுத்து நீக்கப்படுவார்கள் என பேராசிரியர் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கொதித்தெழுந்த மாணாக்கர்கள், கல்லூரி வாயிலில் திரண்டு முற்றுகையிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved