Also Watch
Read this
By: Web Team

ஏரியில் மண் எடுப்பதால், வரக்கூடிய மழைக்காலங்களில், உடைப்பு ஏற்படும் அபாயம் மற்றும் விவசாயம் பாதிக்கும் என கிராம மக்கள் வேதனைப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் பகுதியில் பழவூர் கிராமம் உள்ளது. தனிநபர் ஒருவர், ஏரியின் அருகாமையிலே பண்ணை வீடு மற்றும் விவசாய தோட்டம் வைத்துள்ளார். இந்த விவசாய நிலத்திற்கு ஏரியிலிருந்து மண் எடுத்து வந்தார். இந்த ஏரி நீரை நம்பி, சுமார் 150 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயமும் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் போய்விடும் என, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பழவூர் கிராம மக்கள், ஏரியில் மண் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.