Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த கார் மீது, பின்னால் வந்த வேன் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் 11 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடியை சேர்ந்த ஜெயசித்ரா உள்ளிட்ட நால்வர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக உடுமலைப்பேட்டைக்கு சென்று விட்டு மீண்டும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குசாலை என்ற இடத்தில் காரை நிறுத்திய போது, கள்ளக்குறிச்சியில் இருந்து ஐயப்ப பக்தர்களுடன் திருச்செந்தூர் நோக்கிச் சென்ற வேன் கார் மீது அதிவேகமாக மோதியது. அதில் ஜெயசித்ரா சம்பவ இடத்திலேயே பலியானார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved