news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுரை குலுங்க குலுங்க... தவெக மாநாட்டு திடல் தயார்நிலை
tv

Also Watch

tv

Read this

மதுரை குலுங்க குலுங்க... தவெக மாநாட்டு திடல் தயார்நிலை

மதுரை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvk

மதுரை மாவட்டம் பாரபத்தியில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் தவெக மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி, மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது.

மதுரை மாவட்டத்தில், அருப்புக்கோட்டை - தூத்துக்குடி சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2ஆவது மாநில மாநாடு நாளை மறுநாள் நடைபெறுகிறது.

மாநாட்டு திடலின் சிறப்பு அம்சங்கள்:

சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலான மேடை

பார்வையாளர்கள் கேலரி, வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டுத் திடலை சுற்றிலும் கட்சிக் கொடி, தோரணங்கள் தயார்

பேனர்கள், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் ஏற்பாடுகள்

மாநாட்டு திடலை சுற்றிலும் வண்ண வண்ண மின் விளக்குகள்

இந்நிலையில், மாநாட்டு திடலை ஒன்றுக்கு பலமுறை, நேரில் பார்வையிட்ட மதுரை எஸ்பி ஆனந்த், மாநாட்டுக்கான பாதுகாப்பு, நெரிசல் தவிர்க்கும் விதமாக வழித்தடங்கள் மாற்றும் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு

பல்வேறு மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள், மாநாட்டு திடலை கடந்து செல்லும் பிற வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்களும் அறிவிப்பு

தவெக மாநாட்டுக்கென சுமார் 3,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக வெளியூர்களில் இருந்தும் காவல் துறையினர் வரவழைப்பு 

இதுதவிர, சுமார் 2,000க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள், 500 பெண் பவுன்சர்களும் தவெக சார்பில் ஏற்பாடு

மாநாட்டுக்கு, தவெக தலைவர் விஜய்யை அழைக்கும் விதமாக, அக்கட்சியினர் விமான நிலைய சாலை உள்ளிட்ட மதுரையின் முக்கிய இடங்களில் வித்தியாசமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில், மாநாட்டை சிறப்பாக, மிகுந்த பாதுகாப்புடன் நடத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் ஆனந்த் முக்கிய ஆலோசனை

தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு அறிவுரைகளும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கூறப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் குலுங்கப் போகிறது...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

4
44 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved