Also Watch
Read this
By: Web Team

மினி லாரியில், கடத்தி வந்த 21 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 17 வயது சிறார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒடிசா மாநிலத்தில் இருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், தியாகதுருகம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாடூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், 21 கிலோ 700 கிராம் கஞ்சா இருந்துள்ளது.
விசாரணையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த பழனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன், கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித், அதே பகுதியை சேர்ந்த சரவணன்(17) என்பது தெரிய வந்தது.
ஒடிசாவில், தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்த பாண்டியனுக்கு, கஞ்சா வியாபாரி உடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம், மினி லாரியில் கஞ்சா கடத்தி வந்து, ஏஜெண்டு மூலம் விற்பனை செய்து வந்துள்ளார்.
அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்திய மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், பாண்டியன், ரஞ்சித் ஆகிய இருவரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சரவணனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதிப்பு ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved