Also Watch
Read this
By: Web Team

சென்னையில், மழை வெள்ள பேரிடர்களை சமாளிக்க ராட்சத டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ள மீட்பு பணிக்காக, சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து இரண்டாயிரம் டிராக்டர்களை இரண்டு மாத ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ளது. இந்த ராட்சத மோட்டார் டிராக்டர்கள் அனைத்தும் வானகரம் சுங்கச்சாவடி வழியாக சென்னைக்குள் நுழைந்தன. அதிவேகத்தில் தண்ணீரை வெளியேற்றக்கூடிய மின் மோட்டார்கள் டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ளன. அதிகாரிகளின் பரிசோதனைக்காக வானகரம் சோதனைச்சாவடியில், நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அணிவகுத்து நிற்பதை மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved