Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில், முதற்கட்டமாக, தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாதத்தில்
16,465 நபர்கள், தெரு நாய் கடித்து பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் அனைத்து வீதிகளிலும் குறைந்தது 10 முதல் 30 தெருநாய்கள் வரை சுற்றித் திரிகிறது.
கடந்த சில வாரத்தில், தெரு நாய் கடித்ததில் மூன்றரை வயது குழந்தை மற்றும் முதியவர் ஒருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் தெரு
நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
நகர மன்ற தலைவர் பரிதா நவாப், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் இளவரசன், உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி மருத்துவர்கள், நகராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவினர் தெரு நாய்களை பிடித்து அதற்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு கலர் சாயம் ஸ்பிரே செய்யப்படுகிறது.