Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டியில், வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது
நாகம்மாள் கோயில், பால்குட விழாவை முன்னிட்டு, ஓசாரிபட்டி பாரதி நகர் கிராம பொது மக்கள் மற்றும் பறம்பு நாடு வீர விளையாட்டு நலச்சங்கம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில், 20க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒவ்வொரு காளைக்கும் 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு ஒன்பது மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
மாடு பிடி வீரர்களின் கட்டுக்குள் காளை வந்தாலும், காளையர்களின் பிடியில் சிக்காமல், சில காளைகள் வெற்றி பெற்றது. இதன் அடிப்படையில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் குழுவிற்கும் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அனுமதி இன்றி நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டால், ஓசாரிபட்டியை சேர்ந்த ஐந்து பேர் மீது சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.