Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நியாய விலைக் கடை இல்லாததால், கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
உச்சிக்கொல்லைமேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், நியாயவிலைக் கடை இல்லை. இதனால், கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவாம்பயிர் ஊராட்சிக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
எனவே, நியாயவிலைக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved