Also Watch
Read this
By: Web Team

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் விசிக நிர்வாகி ஒருவர் தனது சட்டையை கழற்றி விட்டு காவல்துறையினரிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.
பெரியகுளத்தை சேர்ந்த விசிக நிர்வாகிகளான தர்மராஜ் மற்றும் பரஞ்ஜோதி ஆகிய இருவரும் குடிபோதையில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் அவர்களை மருத்துவமனையில் இருந்து வெளியேறும்படி கூறியதால் ஆத்திரம் அடைந்த விசிக நிர்வாகி சட்டையை கழற்றிவிட்டு ஆபாசமாக பேசி வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.